சென்னை:
திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.
திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதன்படி பேரூராட்சி, நகராட்சி பதவிக்கான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு நிறைவடைந்தது. தொடர்ந்து உயர் நிலையில் உள்ள தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து இருந்தது.
புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே இன்று தி.மு.க தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் என் மூவரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் தற்போது 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னையில் நாளை நடைபெறும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.
இதனிடையே இன்று தி.மு.க தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் என் மூவரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் தற்போது 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னையில் நாளை நடைபெறும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.