இந்த உலகில் எல்லோரும் கொஞ்சம் பணத்துடன் பிறக்கிறார்கள். ஆனால், மிகச் சிலரே பெரும் பணக்காரர் ஆகிறார்கள். அது எப்படி நடக்கிறது என்று கூர்ந்து கவனித்தால், இன்றைக்குப் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் தங்களிடம் உள்ள கொஞ்சம் பணத்தை ஏதாவது ஒரு தொழிலில் சரியாக முதலீடு செய்திருப்பார்கள். அந்தப் பணம், காலபோக்கில் நல்ல லாபம் தர, அது பல மடங்காகப் பெருகி, இன்றைக்குப் பெரும் பணக்காரர்களாக மாறியிருப்பார்கள்.
தொழிலில் முதலீடு செய்து நம் பணத்தைப் பெருக்குவது என்பது எல்லோராலும் முடியக்கூடிய செயல் அல்ல; அறிவு, அனுபவமும் ஆகிய இரண்டும் அதற்கு மிகவும் தேவை. அதனோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும்.

உங்களுக்குத் தொழில் செய்யத் தெரியாது; அது குறித்து எந்த அனுபவமும் இல்லை என்றாலும், நீங்களும் உங்களிடம் உள்ள பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதன் உங்களிடம் உள்ள கொஞ்சம் பணத்தை அதிகமாக பெருக்க முடியும்.
இது எப்படி சாத்தியம், இதற்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, இதற்கு ஒரு முதலீட்டாளர் செய்யவேண்டியது என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்ல நாணயம் விகடனும், அதித்யா பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இணைந்து “மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்’’ என்கிற நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் பிராந்திய மேலாளர் எஸ்.குருராஜ், தமிழகப் பிரிவின் தலைவர் கே.சுவாமிநாதன் ஆகியோர் பேசுகிறார்கள். இவர்களுடன் சிறப்புப் பேச்சாளராக கலந்து பேசுகிறார் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்.
இந்த நிகழ்ச்சியானது, சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஹோட்டல் என்.கே கிரான்ட் பார்க்கில் வரும் 15-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல், 8.30 வரை நடக்க உள்ளது.

முக்கியமான இந்த நிகழ்ச்சியில், தென் சென்னையில் இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாமே! கோவிட்டுக்குப் பிறகு நடக்கும் முக்கியமான முதலீட்டாளர் நிகழ்ச்சி இது என்பதால், அனைவரும் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து கலந்துகொள்ளலாமே!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் லிங்கை, https://events.vikatan.com/nanayam/aditya-birla-iap-on-ground/index.php கிளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாமே!