ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கான தோல்விக்கு தமிழர்கள் காரணமல்ல:வெளிவரும் தகவல்கள்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கை மோசமான தோல்வியை
சந்தித்துள்ளது.

முன்னதாக இலங்கைக்கு ஆதரவை வழங்கிய முஸ்லீம் நாடுகள் உட்பட பாரம்பரிய
நண்பர்கள், இலங்கையின் கோவிட் தகனம் விவகாரம் காரணமாக தமது ஆதரவை வழங்கவில்லை.

மனித உரிமைகள் பேரவை

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கான தோல்விக்கு தமிழர்கள் காரணமல்ல:வெளிவரும் தகவல்கள் | Sri Lanka S Failure In The United Nations

இந்த தோல்வியை அடுத்து போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள்
சபையிடம், மனித உரிமைகள் பேரவை, அதிக நிதியை கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு விஜயம் செய்ய
உள்ளனர்.

அரசாங்கத்தரப்பின் கவனயீனம்

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கான தோல்விக்கு தமிழர்கள் காரணமல்ல:வெளிவரும் தகவல்கள் | Sri Lanka S Failure In The United Nations

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்துக்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் மீதோ அல்லது வெளிநாடுகள் மீதோ
அல்லது எதிர்கட்சிகள் மீதோ பழியை சுமத்த முடியாது என்று இலங்கையின் ஊடகங்கள்,
தமது கருத்தை வெளியிட்டுள்ளன.

ஏனெனில் பல ஆண்டுகளாக இந்த விடயங்களை மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்து
வந்தபோதும், இலங்கை அரசாங்கத்தரப்பில் இருந்து அதற்குரிய உரிய கவனம்
செலுத்தப்படவில்லை.

அத்துடன் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள அரசாங்கத்தின் உத்தி என்ன? ஏதேனும்
இருந்ததா? என்பதே பிரதான கேள்வியாக அமைந்துள்ளது என்றும் ஊடகங்கள்
குறிப்பிட்டுள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.