சிறுவர்களுக்கு எதிராகமேற்கொள்ளப்படும் வன்முறைஇ பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல்களைத்திரட்டுவதற்கான வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபை தெரிவித்துள்ளது.
சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில், சர்வதேச இணக்கப்பாட்டிற்கு அமைவாக நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றார்.
இது தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.