புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா? அவரது சாத்தியமான இலக்குகள் எது? வல்லுநர்களின் கணிப்பு


உக்ரைன் ரஷ்யா போரில் புடின் தந்திரோபாய அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம்.

உக்ரைனுக்குள் ரஷ்ய ஜனாதிபதியின் அணு ஆயுத தாக்குதல் இருக்கலாம் என வல்லுநர்கள் கணிப்பு.

உக்ரைனின் எதிர் தாக்குதலை மாற்றியமைக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என நிபுணர்களால் நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ராணுவ படைகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதால், புடின் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை வழங்கப்பட்டது, இதனால் உலகத் தலைவர்கள் புடினின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வரத் தொடங்கியுள்ளனர்.

புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா? அவரது சாத்தியமான இலக்குகள் எது? வல்லுநர்களின் கணிப்பு | Putin Use Nuclear Weapons Possible Russian TargetsREUTERS

இதற்கிடையில் உக்ரைனையும் ரஷ்யாவையும் இணைக்கும் இணைப்பு பாலம் கார் வெடிகுண்டு மூலம் தகர்த்தப்பட்டு இருப்பதும், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டு வருவதால் புடினின் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை அதிகரித்துள்ளது.

புடின் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடுவாரா?

உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதலை மாற்றியமைக்க புடின் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், மூலோபாய ஏவுகணையை விட குறைவான சக்தி கொண்ட தந்திரோபாய ஆயுதத்தை பயன்படுத்தலாம், இவை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி-யில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை விட வலிமையானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா? அவரது சாத்தியமான இலக்குகள் எது? வல்லுநர்களின் கணிப்பு | Putin Use Nuclear Weapons Possible Russian TargetsARCHIVE PHOTO

அத்தகைய தந்திரோபாய தாக்குதலை புடின் தொடங்கலாம், அத்துடன் உலகத்தை விளிம்பிற்கு அழைத்து சென்று பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு புடின் திரும்பலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

புடினின் அணு ஆயுத தாக்குதலுக்கு சாத்தியமான இலக்குகள்?

உக்ரைனுக்குள், ஆனால் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மேற்கே

காற்றின் திசையை பொறுத்து, அவை ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகளை அழிப்பதில் இருந்து தவிர்கலாம், மேலும் உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்து, அவர்கள் படைகள் பயன்படுத்த முடியாத அணு கதிர்வீச்சால் ஆன இறப்பு மண்டலம் ஒன்றை உருவாக்கலாம் என தெரியவந்துள்ளது.

புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா? அவரது சாத்தியமான இலக்குகள் எது? வல்லுநர்களின் கணிப்பு | Putin Use Nuclear Weapons Possible Russian TargetsiStockphoto

அணுகுண்டு தாக்குதலை புடின் எப்படி நடத்துவார்? 

ஒரே நேரத்தில் பல போர் விமானங்களின் ஒன்றில் இருந்து தந்திரோபாய ஏவுகணை ஒன்றில் இருந்து ஏவப்படலாம்.

இவை எதிரிகளின் வான் பாதுகாப்பிற்கு அது எங்கிருந்து வருகிறது என்ற குறைவான எச்சரிக்கையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: தென்னாப்பிரிக்க அணியை புரட்டியெடுத்த இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஜோடி: இந்தியா அபார வெற்றி

புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா? அவரது சாத்தியமான இலக்குகள் எது? வல்லுநர்களின் கணிப்பு | Putin Use Nuclear Weapons Possible Russian TargetsiStockphoto

எவ்வளவு சக்தி வாய்ந்தது தந்திரோபாய அணுகுண்டு? 

ஹிரோஷிமா-வை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும், ஐந்து மைல் சுற்றளவில் பெரும் உயிரிழப்புகளையும் பேரழிவுகரமான சேதத்தையும் ஏற்படுத்தும்.

அபாயகரமான கதிர்வீச்சு நோய், தீக்காயங்கள் மற்றும் புற்றுநோய்கள் அனைத்தும் சாத்தியமாகும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.