சென்னை: முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகர்ஜி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர். நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐ.இல் நீண்ட காலம் பணியாற்றி தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்தவர்.
காவல்துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய முகர்ஜி மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரோடு பணியாற்றிய காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.