ஸ்டாக்ஹோம் வங்கிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆய்வு செய்த மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இலக்கியம்,அமைதி உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் விருதுகள் அறிவிக்கப்படும்.
டிசம்பர் மாதம் நடக்கும் நிகழ்வில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. பதக்கம் மற்றும் சான்றிதழுடன், 7.20 கோடி ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகின்றன.
கடந்த 3ம் தேதி முதல் விருது பெற்றோர் பெயர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், அந்நாட்டின், ‘பெடரல் ரிசர்வ்’ வங்கியின் முன்னாள் தலைவருமான பென் எஸ்.பெர்னான்கே மற்றும் அந்நாட்டை சேர்ந்த மேலும் இரு பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டைப்விக் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இவர்கள் செய்த ஆய்விற்காகஇந்த விருது அளிக்கப்படுகிறது. வங்கி சரிவை தவிர்ப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இவர்கள் செய்துள்ள ஆய்வில் சிறப்பாக வெளிப்பட்டு இருப்பதாக நோபல் விருது கமிட்டி தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement