வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: நான் பிரதமராக பதவியேற்ற போது இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்தது என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும் குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி ஜாம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது, கடந்த 2014-ம் ஆண்டு நான் பிரதமராக பொறுப்பேற்ற போது இந்திய பொருளாதாரம் 10-ம் இடத்தில் இருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் முன்னேற்றமடைந்து 5-வது இடத்தில் உள்ளது என்றார்.
![]() |
காரை விட்டு இறங்கிய மோடி
முன்னதாக பிரதமர் மோடி ஜாம்நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் திரண்டு இருந்த மோடியை உற்சாகத்துடன் கோஷமிட்டு வரவேற்றனர்.
அப்போது திடீரென காரை விட்டு இறங்கினார். அப்போது தொண்டர் ஒருவர் மோடியின் தாயாருடன் இருக்கும் ஓவியத்தை மோடிக்கு பரிசாக அளித்தார். அதை பெற்றுக்கொண்ட மோடி, மற்றொரு ஓவியத்தில் குஜராத் மொழில் ஆட்டோகிராப் இட்டார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
