அவர் அதுக்கு முயற்சிக்கிறார்… திருமா மீது இந்து அமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு!

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான பிறகு ராஜ ராஜ சோழன் குறித்தும், ஹிந்து மதம் பற்றியும் அரசியல் கட்சித் தலைவர், சினிமா பிரபலங்கள் தெரிவித்துவரும் கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

‘ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்; அவர் இந்து அல்ல’ என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

“ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து?” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்

.

‘இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் என்று தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர்’ என்று தன் பங்குக்கு இந்த விஷயத்தை கொளுத்திப் போட்டார் நடிகர் கமல் ஹாசன்.

இப்படி பிரபலங்கள் ஆள் ஆளுக்கு இந்து மதத்தை சீண்டி வருகிறது. இந்து எழுச்சி பேரவை கடும கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்த அமைப்பின் மாநில தலைவர் சந்தோஷ்குமார் ஜி, சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

இந்து மதம் என்பதே இல்லை. சைவம், வைணவம் தான் இருந்தது என்று பேசுபவர்களுக்கும், ராஜா ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே இல்லை என்று பேசு வருபவர்களும் அந்த காலத்தில் இஸ்லாமியமும், கிறிஸ்தவமும்தான் இல்லை என்று பேச துணிவு இருக்கின்றதா?

அந்த காலத்தில் சைவ, வைணவ மதங்களை அழித்து இஸ்லாமியமும், கிறிஸ்தவமும் பரப்பப்பட்டது என்றும் சொல்வதற்கு துணிவு இருக்கிறதா?

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம் உள்ளிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் அல்லாத அனைவரும் இந்துக்கள் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது இந்து மதம் குறிித்து திருமாவளவன், வெற்றிமாறன், கமல் ஹாசன் போன்றவர்கள் கூறிவரும் கருத்துகள் மூலம் அவர்கள் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார்களா ? என்ற ஒரு சந்தேகம் எழுகிறது.

இந்து மதத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இவர்கள் மீது தமிழக காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட உள்ளது என்று சந்தோஷ்குமார் ஜி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.