கரூர் மாவட்டம் புகழூர் அருகே, இடத்தகராறில், அண்ணன் மற்றும் தங்கை குடும்பத்தினர் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
செம்படாபாளையம் பகுதியை சேர்ந்த பாப்பாத்திக்கும், இவரின் அண்ணன் செல்வத்திற்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, கைகலப்பாக மாறிய நிலையில், செல்வம் மற்றும் பாப்பாத்தி குடும்பத்தினர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.