திருப்பதி : திருப்பதி திருமலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம், தற்போது சற்று குறைந்து காணப்பட்டது. எனவே, நேற்று காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
அதனால், தர்ம தரிசனத்திற்கு 20 மணி நேரமும், விரைவு தரிசனத்திற்கு 5 – 6 மணி நேரமும் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம், 86 ஆயிரத்து 188 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். கோவில் உண்டியலில் சராசரியாக தினமும், 2 – 3 கோடி ரூபாய் வரை வசூலாகி வருவது வழக்கம்.
தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், 3 – 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருவாய் வசூலாகி வருகிறது. இந்நிலையில், பக்தர்கள் நேற்று முன்தினம் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், 5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement