கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘அழகான நாடு – எழுச்சியுறும் தேசம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக ,மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்களில் காணப்படும் சிறிய நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்கான சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை இதற்கான நடவடிக்கை இடம்பெற்றன.
கைவிடப்பட்ட வயற்காணிகளை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தல், உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் சமய நிகழ்வுகள் என்பனவும் இடம் பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை கமநல சேவைகள் பிரிவினுள் நெடியமடுவில் உள்ள களிக்குளத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜெகன்நாத்தின் மேற்பார்வையின் கீழ் கமநல உத்தியோகத்தர் ரஷீட் இன் நெறிப்படுத்தலின் கீழ் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கமநல அபிவிருத்தி உத்யோகத்தர்கள், பிரதேச சபை அரசியல் பிரமுகர்கள், உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.