வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் இன்று (அக்.,11) நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 99 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கக்கூடிய, மூன்றாவது போட்டி (பைனல்) இன்று (அக்.,11) டில்லியில் நடந்தது.
மைதானம் ஈரப்பதம் காரணமாக தாமதமாக துவங்கிய போட்டியில் ‘டாஸ்’ என்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு மாலன், குயின்டன் டி காக் துவக்கம் தந்தனர்.

இந்திய சுழல் வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் குயின்டன் (6) வேகமாக வெளியேறினார். இதனைத்தொடர்ந்து மாலன் (15), ஹெண்ட்ரிக்ஸ் (3), மார்க்ரம் (9), மில்லர் (7) அடுத்தடுத்து வெளியேறினர். ஓரளவு நிதானமாக விளையாடிய கிளாசன் 34 ரன்னில் போல்டானார். குல்தீப் யாதவ் ‘சுழலில்’ சிக்கி ஆண்ட்லே (5), ஜேன்சன் (14), பார்ட்யூன் (1), நோர்ட்ஜ் (0) வெளியேற தென் ஆப்ரிக்க அணி 27.1 ஓவரில் 99 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 100 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement