
கோல்டன் விசா பெற்றார் குஷ்பு
ஐக்கிய அரபு அமீரகம் திரைப்பட நடிகர், நடிகைகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா மூலம் 10 ஆண்டுகள் வரை அந்த நாட்டின் குடிமக்கள் போன்று வாழலாம். கமல்ஹாசன், ஷாருக்கான், அமிதாப் பச்சன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், பார்த்திபன், நாசர், விஜய் சேதுபதி ஊர்வசி ரவுடேலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், திரிஷா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகை குஷ்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.