சான்பிரான்சிஸ்கோ, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த ஒரு சீக்கிய குடும்பம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வந்தனர்.
சமீபத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தி செல்லப்பட்டனர். ஜஸ்தீப் சிங், 36, அவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், 27, எட்டு மாதக் குழந்தை ஆரூஹி தெரி மற்றும் ஜஸ்தீப்பின் சகோதரர் அமன்தீப் சிங், 39, ஆகியோரின் உடல்கள் சமீபத்தில் மீட்கப்பட்டன.
இவர்களை கடத்திக் கொலை செய்ததாக, ஜீசஸ் சால்கோடா, 48, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் சுற்றி வளைத்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் மீது நான்கு கொலை வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement