பீஜிங் : சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பென்யாங்க் நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஹோஹாட் நகரில் கடந்த 12 நாட்களில் 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதிக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜின்ஜியாங் மாகாணம், ஷாங்காய் மற்றும் நாட்டின் தலைநகரான பீஜிங்கில் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
பீஜிங்கில் அடுத்த வாரம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய கூட்டம் நடக்க உள்ளது, கூட்டத்துக்குப் பின், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, பெரும்பாலான சீனர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement