காவிரி டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் திணறி வந்தனர்.
சாகுபடி செய்த நெல்லானது அரசு நிர்ணயித்திருந்த 17 சதவீத ஈரப்பதத்தை தாண்டி இருப்பதால், அவர்களின் நெல்லை விற்க முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து விவசாயிகள் ஈரப்பதத்திற்கான விதியினை தளர்த்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.
அரசியல் கட்சிகளின் தரப்பில் இருந்து முதல் ஆளாக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விதியை தளர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொண்டு வலியுறுத்தி வந்த நிலையில், இன்று காலை மீண்டும் மத்திய அரசிடம் 25% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான அனுமதியை பெற வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இந்த நிலையில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து விவசாயிகளின் முகத்தில் சுற்று மகிழ்ச்சி திரும்பியிருக்கிறது.