பிரித்தானிய பெண் செவிலியரின் கோர முகம்.. சிரித்துக்கொண்டே 10 கொலை செய்த கொடூரம்


5 ஆண் பிள்ளைகளையும் 5 பெண் பிள்ளைகளையும் இவர் கொலை செய்ய முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில், செவிலியர் லூசி இதுவரை எந்த குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்ளவில்லை

பிரித்தானியாவில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் பிறந்து 5 நாட்களேயான பச்சிளம் குழந்தையின் வயிற்றில் செவிலியர் ஒருவர் காற்றை நிரப்பி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் செஷயரில் உள்ள செஸ்டர் மருத்துவமனையிலேயே குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த வழக்கில் சிக்கியுள்ள 32 வயது செவிலியர் லூசி லெட்பி தன்மீதான குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்து வருகிறார்.

பிரித்தானிய பெண் செவிலியரின் கோர முகம்.. சிரித்துக்கொண்டே 10 கொலை செய்த கொடூரம் | Chester Hospital Nurse Lucy Killing Spree

2015 ஜூன் மாதம் முதல் 2016 ஜூன் வரையில் செவிலியர் லூசி லெட்பி 5 ஆண் பிள்ளைகளையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி 5 ஆண் பிள்ளைகளையும் 5 பெண் பிள்ளைகளையும் இவர் கொலை செய்ய முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவர் தொடர்பிலான விசாரணை மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானிய பெண் செவிலியரின் கோர முகம்.. சிரித்துக்கொண்டே 10 கொலை செய்த கொடூரம் | Chester Hospital Nurse Lucy Killing Spree

@SWNS

அதில், பிறந்து ஐந்து நாட்களேயான பச்சிளம் குழந்தையின் மூக்கில் பொருத்தப்பட்டிருந்த குழாயில் ஊசியால் காற்றை நிரப்பி, குறித்த குழந்தை மாரடைப்பார் இறக்கும் வகையில் இரக்கமின்றி நடந்துள்ளார்.

30 வாரத்திலேயே பிறந்துள்ள அந்த ஆண் குழந்தை வெறும் 800 கிராம் மட்டுமே இருந்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தாலும், குழந்தை பிழைத்துக்கொள்ளும் என்றே மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

பிரித்தானிய பெண் செவிலியரின் கோர முகம்.. சிரித்துக்கொண்டே 10 கொலை செய்த கொடூரம் | Chester Hospital Nurse Lucy Killing Spree

@Cavendish Press

ஆனால் ஜூன் 14ம் திகதி குறித்த குழந்தையை செவிலியர் லூசி லெட்பி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில், செவிலியர் லூசி இதுவரை எந்த குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றே தெரியவந்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.