கெத்து காட்ட நினைத்த வாலிபர்! தற்பொழுது காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருக்கும் சோகம்!
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்க அரசு ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். அவருடைய மகன் மகன் கோபாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. தன்னை அந்த பகுதியை சேர்ந்த நண்பர்கள் மற்றும் மக்கள் யாரும் ஒல்லியாக இருப்பதால்தான் யாரும் மதிக்கவில்லை என வருத்தப்பட்டுள்ளார். எப்படியாவது பெரிய ரவுடியாக வலம் வரவேண்டும். அப்போதுதான் ஊரே தன்னை பார்த்து நடுங்கும் என எண்ணியுள்ளார் கோபாலகிருஷ்ணன்.
இதற்காக என்ன செய்யலாம் என யோசித்த போது தான் அந்த விபரீத எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது. போலீசார் ரோந்து செல்லும் இடங்களை நோட்டமிட்டு போலீசார் அசந்திருந்த நேரத்தில் ரோந்து வாகனம் அருகே நின்று பல கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று கோபால கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் அப்போது தான் யாரென்று காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதியுள்ளார். ஏற்கனவே போலீஸ் வாகனம் முன்பு கையில் பெரிய அளவிலான பட்டா கத்தியை பிடித்து நிற்பது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்ட வீடியோ காட்சி கலந்து போலீசாரின் கண்ணில் பட்டுள்ளது.
இதனை அடுத்து போலீசார் கோபாலகிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது எதுவும் நடக்காததுபோல் வீட்டில் இருந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரிய அளவிலான பட்டா கத்தி இவருக்கு எங்கிருந்து கிடைத்தது. வீடியோவை வெளியிட்டதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும்பொழுது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஒரு ட்ரெண்டாக நினைத்து பல இளைஞர்கள் சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.