
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை விமர்சையாக நடத்தப்பட போவதில்லை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜுன் 3-ம் தேதி முடிசூட்டு விழா நடக்கவுள்ளது.

நைஜீரியாவில் 85 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 76 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட கோர நிலச்சரிவில் 22 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

அமெரிக்க ராப்பர் கன்யே வெஸ்ட்-ன் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டன.

உக்ரைன் மக்கள்மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு நேட்டோ கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவை குறியாக வைத்து 84 ஏவுகணைகளை ஏவியதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பரவலால் சீனாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டில் புதிய டிஜிட்டல் விசா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப் டவுனில் 28-வது சர்வதேச பட்டம் விடும் விழா கோலாகலமாக நடந்தது.