சட்ட விரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது குழுவொன்று பேசாலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பேசாலை 08ஆம் பிரிவு பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இந்தியாவிற்கு சடம்டவிரோதமாக தப்பிச் செல்வதற்கு தயாரான நிலையில் வீடொன்றில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 08 பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 6 பேரையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இரு குழந்தைகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.