எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு… கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா


டயானா – கமிலா சந்தித்து தனியாக பேசிய தருணங்கள்.

என் கணவர் எனக்கு வேண்டும் என உருகிய டயானா.

சார்லஸ் – டயானா திருமணம் செய்து வாழ்ந்த போது கமிலா அவர்கள் திருமண பந்தத்துக்கு நடுவே எப்படி வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரித்தானியாவின் மன்னர் பொறுப்பில் தற்போது உள்ள சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இதற்கு முன்பில் இருந்தே கமிலாவை சார்லஸ் காதலித்து வந்த போதிலும் அப்போது அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை.

சார்லஸ் – டயானா திருமணத்தில் கமிலாவும் கலந்து கொண்டார்.
திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் சார்லஸ், கமிலாவுக்கு விலையுயர்ந்த பிரேஸ்லெட்டை வாங்கி கொடுத்திருந்தார்.
அதில் G மற்றும் F என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது, இது Gladys மற்றும் Fred என்பதாகும்.

அதாவது தங்கள் சார்லஸ் – கமிலா தங்கள் தனிப்பட்ட கடிதங்களில் ஒருவருக்கொருவர் பயன்படுத்திய செல்லப்பெயர்கள் தான் இவை.
இந்த ப்ரேஸ்லெட் விஷயத்தை டயானா கண்டுபிடித்தார்.

எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு... கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா | Charles And Camilla Relationship Princess Diana

Chris Jackson / Getty Images / Kimimasa Mayama / Reuters

பின்னர் 1989ல் நடந்த சம்பவத்தை Diana: Her True Story – In Her Own Words என்ற புத்தகத்தில் எழுத்தாளர் ஆண்ட்ரூ மோர்டன் குறிப்பிட்டுள்ளார்.
இதில் எழுதப்பட்ட விஷயங்கள் எல்லாம் டயானாவே விவரித்ததாகும்.

அதன்படி டயானா கமிலாவை சந்தித்து, உனக்கும் சார்லஸுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும், அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

அதற்கு கமிலா பதில் அளிக்கையில், நீ விரும்பிய அனைத்தையும் பெற்றுவிட்டாய்.
உலகில் உள்ள எல்லா ஆண்களும் உன்னை காதலிக்க வைத்திருக்கிறாய், உனக்கு இரண்டு அழகான குழந்தைகள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் உனக்கு வேறு என்ன வேண்டும்? என கேட்டார்.

எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு... கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா | Charles And Camilla Relationship Princess Diana

Tim Graham Photo Library via Getty Images

அதற்கு டயானா, எனக்கு என் கணவர் வேண்டும் என பதில் கூறியிருக்கிறார்.
அதாவது, டயானாவின் பதிலில் மிகுந்த வேதனையும் வலியும் இருந்திருக்கிறது.
இதன்பின்னர் சார்லஸ் – டயானா கடந்த 1992 டிசம்பரில் பிரிந்தனர், இவர்களுக்கு அதிகாரபூர்வ விவாகரத்து 1996ல் ஆனது.

இதற்கு அடுத்த ஆண்டு நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். இதன் பிறகு 2005ல் சார்லஸ் – கமிலா தம்பதி திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராகவும், அவர் மனைவி கமிலா queen consort பதவியிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு என் கணவர் சார்லஸ் வேண்டும்! திரும்ப கொடு... கமிலாவிடம் மிகுந்த வலியோடு கேட்ட இளவரசி டயானா | Charles And Camilla Relationship Princess Diana

GETTY IMAGES



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.