
ராணிப்பேட்டை செங்காடு மோட்டூர் கிராமத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கல்குவாரிகளில் இருந்து பாறை கற்கள், ஜெல்லிகளை ஏற்றிச் சென்ற 10க்கும் மேற்பட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
அதிக பாரத்துடன் நாள் தோறும் ஏராளாமான லாரிகள், செல்வதால் சாலைகள் குண்டு குழியுமாக ஆவதாகவும், கொண்டு செல்லப்படும் கற்கள் சாலைகளில் விழுவதால் விபத்து நேரிடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.