புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அமைந்துள்ள குமரமலை முருகன் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இங்கு வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கும் முயற்சியின் போது அதில் இருந்த பணம் மற்றும் நாணயங்கள் கோயில் முழுவதும் சிதறி கிடந்தன.
கோவில் திருவாபரணங்கள் எதுவும் கொள்ளை போய் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.