கோவை மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தவர் கோவை தங்கம். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில்
சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கோவை தங்கம் இரவு 12.28 மணியளவில் உயிரிழந்தார்.
கோவை தங்கம் உடல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று (அக்டோபர் 12) மாலை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மூத்த அரசியல்வாதியான கோவை தங்கம் மறைவிற்கான பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.