சென்னை: சென்னை மண்ணடி மற்றும் பூக்கடை பகுதிகளில் கடை, ஓட்டலில் பணியாற்றிவந்த குழந்தை தொழிலாளர்கள் 5 பேர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அனைவரும் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய பேக்கரி, டீக்கடை, ஓட்டல் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
