சொந்த வாசனை திரவிய பிராண்டை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்! அதன் விலை என்ன தெரியுமா?


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலோன் மஸ்க் வாசனை திரவியங்கள் விற்பனையாளராக மாறியுள்ளார்.

கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி இந்த வாசனை திரவியத்தை வாங்கலாம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

எலோன் மஸ்க் தனது சொந்த வாசனை திரவியங்களை ‘பர்ன்ட் ஹேர்’ (Burnt Hair) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் வெளியீட்டை அறிவிக்க மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்திக்கொண்டார்.

தனது புதிய வாசனை திரவிய பிரண்டை அக்டோபர் 9-ஆம் திகதி அறிவித்த அவர், இன்று தனது ட்விட்டர் பதிவில், “என்னைப் போன்ற பெயருடன், வாசனைத் தொழிலில் இறங்குவது தவிர்க்க முடியாதது – ஆனால் நான் ஏன் இவ்வளவு காலம் இதற்காக போராடினேன்!?” என்று தனக்கே புரியாமல் இருப்பதை போன்று அவர் பதிவிட்டுள்ளார்.

சொந்த வாசனை திரவிய பிராண்டை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்! அதன் விலை என்ன தெரியுமா? | Elon Musk Launch Own Perfume Brand Burnt Hair

இதனை பதிவிட்ட சிறிது நேரத்தில், அவர் ஏற்கனவே சுமார் 10,000 சென்ட் பாட்டில்களை விற்றுவிட்டதாக அறிவித்தார்.

மேலும், எலான் மஸ்க் தனது ட்விட்டர் சுயவிவரத்தை “பெர்ஃப்யூம் சேல்ஸ்மேன்” என்று மாற்றியுள்ளார்.

Burnt Hair வாசனை திரவியத்தின் வலைத்தளத்தின்படி, அதன் ஒரு போத்தலின் விலை 100 அமெரிக்க டொலர்கள் ஆகும். (இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ. 36,650 ஆகும்)

அதன் வாசனையைப் பொறுத்தவரை, Burnt Hair வாசனை திரவியத்தில் “தி எசன்ஸ் ஆஃப் ரிபக்னன்ட் டிசையர்” இருப்பதாக இணையதளம் கூறுகிறது.

கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி இந்த வாசனை திரவியத்தை வாங்கலாம். “நீங்கள் Doge மூலம் பணம் செலுத்தலாம்!” என்று எலான்  மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாசனை திரவியம் “ஒரு சர்வ வல்லமையுள்ள தயாரிப்பு” என்றும் அவர் கூறுகிறார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.