திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் உலாவரும் முதலையை பார்க்க ஆற்றுப்பாலத்தில் குவியும் பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி பழைய மற்றும் புதிய ராஜா வாய்க்கால் பாசன பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காகவும், பாசனத்திற்க்காகவும் அமராவதி  அணையிலிருந்து நீர்  திறக்கப்பட்டது. இதில் சில முதலைகள் அணையில் இருந்து தப்பித்து அமராவதி ஆற்றுப்பகுதிகளில உலா வருகிறது. குறிப்பாக கல்லாபுரம், மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர, கணியூர் மற்றும் கடத்தூர் ஆகிய ஆற்றுப்பகுதிகளில், அவ்வப்போது பாறைகளின் மேல்  படுத்துக்கொள்ளும் முதலையை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அவ்வப்போது விவசாய நிலங்களில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முதலைகளை பிடிக்க வேண்டுமென விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமராவதி ஆற்றுப்பாலத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், அமராவதி ஆற்றில் உலா வரும் முதலையை பார்பதற்க்காக, ஆற்றுப்பலத்தில் வாகனங்களை நிறுத்தியதால்  அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.