"நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு இது தான் காரணம்." திரிஷா ஓபன் டாக்.!

சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் சீனியர் நடிகைகளில் ஒருவர்தான் திரிஷா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சினிமாவில் சாதித்தாலும் அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது. 

ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று ஒரு திருமணம் நடக்காமல் போய்விட்டது. அதன் பிறகு தெலுங்கு நடிகர் ராணாவை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில், சமீபத்தில் அவர் ஒரு பேட்டி அளித்த போது, “நான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அதிக பேர் கேட்கிறார்கள். 

இது மட்டும் நடந்துவிட்டால் போதும்., அதற்கு பின்னர் டும்..டும் தான்.!! திரிஷா  ஓபன் டாக்.!! - Seithipunal

அப்படியெல்லாம் எனக்கு அவர்கள் கேட்பது சுத்தமாக பிடிக்கவில்லை. சாதாரணமாக எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று கேட்டால் கூட என்னிடம் பதில் கிடைக்கும். ஆனால், அவர்கள் பேசும் விதமே வேறு மாதிரி இருக்கிறது. நான் யாரோடு நானாக இருக்கிறேன் என்பதை பொறுத்து தான் எனது திருமணம் நடக்கும். 

எனக்கு ஒரு நபரை பார்த்து இவர் தான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கக்கூடிய தகுதி படைத்தவர் என்று தோன்ற வேண்டும். அதுவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். விவாகரத்துகள் நடப்பதை நான் விரும்பவில்லை. 

ஜோடியாக நடித்த ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் நடிகை திரிஷா..! யாருடன்  தெரியுமா.?! - Seithipunal

திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெரும் நிலை எனக்கு வேண்டாம். என்னை சுற்றி இருக்கும் நிறைய பேர் திருமணமான பின்னர் அதிருப்தியில் தான் இருக்கின்றனர். எனவே, அதிருப்தியை தரும் திருமணத்தை நான் விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.