ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் எழுந்து வந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் டெய்லர் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று காணாமல் போனது. எனவே, வாகனத்தை இழந்த உரிமையாளர் அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஒரு இளம் பெண் அந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில் ஆராஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தமிழ்ச்செல்வி தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்ச்செல்வியை போலீசார் கைது செய்து தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் சுதன் மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை தந்துள்ளது.