கொச்சி கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு கொச்சியில், 10 ரூபாய்க்கு உணவு அளிக்கும், ‘சம்ரிதி’ திட்டத்தை மாநகராட்சி சமீபத்தில் துவக்கியது. இதையடுத்து, பெண்களுக்கான பிரத்யேக தங்கும் விடுதி நேற்று திறக்கப்பட்டது.
‘அவள் விடுதி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், மிக குறைந்த கட்டணத்தில் பெண்கள் தங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. ‘டார்மெட்டரி’ எனப்படும் பலர் தங்கக்கூடிய படுக்கை வசதியுள்ள கூடம் மற்றும் தனி அறைகள் உள்ளன.
கொச்சி மாநகராட்சிக்கு சொந்தமான, ‘பரமாரா லாட்ஜ்’ என்ற விடுதியை அவள் விடுதியாக மாநகராட்சி மாற்றி வடிவமைத்துள்ளது. இத்திட்டத்திற்கு 4.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
டார்மெட்டரியில் தங்குவதற்கு, நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவுடன் சேர்த்து 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மேலும் சலுகை அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதியை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நேற்று திறந்து வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement