மகளிர் ஆசிய கிண்ணம் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று (11) அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் போட்டி இடம்பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் மொத்தமாக பெற்றது.
இலங்கை சார்பில் அணி தலைவி சமரி அதபத்து 41 ஓட்டங்கள் அதிகமாக பெற்றிருந்தார். இதேவேளை பாகிஸ்தான் அணி தரப்பில் ஒமைமா சோகைல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 113 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. அனைத்து லீக் சுற்று ஆட்டங்களும் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இருப்பினும், பங்களாதேஷ், டுபாய், மலேசியா அணிகள் லீக் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளன.