ரஷ்ய எல்லையில் அமெரிக்கா, ஜப்பான் திடீர் ராணுவ கூட்டு பயிற்சி: எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை


ரஷ்ய எல்லையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி.

நீண்ட தூரம் பாயும் HIMARS ஐ பயன்படுத்த கூடாது என ரஷ்யா எச்சரிக்கை

தனது எல்லைக்கு அருகில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் ராணுவ பயிற்சியை தொடங்கியதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க துருப்புகளுடன் ஜப்பான் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று மாஸ்கோவில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு ரஷ்ய அரசாங்கம் எச்சரிக்கை குறிப்புகள் வழங்கியுள்ளது.

அதில் தனது எல்லைக்கு அருகில் நீண்ட தூர பீரங்கி அமைப்புகளான HIMARS ஐப் பயன்படுத்துவதை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. 

ரஷ்ய எல்லையில் அமெரிக்கா, ஜப்பான் திடீர் ராணுவ கூட்டு பயிற்சி: எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை | Russia Protests Over Us Japan Military DrillsEPA

மேலும் இந்த இராணுவ பயிற்சிகளை தூர கிழக்கில் ஏற்படும் பாதுகாப்பு சவாலாக கருதுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ரஷ்ய எல்லைக்கு அருகில் HIMARS சோதனையை உடனடியாக நிறுத்துமாறு ஜப்பானை வலியுறுத்தியது, அவ்வாறு அவை நிறுத்தப்படவில்லை என்றால் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய ட்ரோனை சீறிபாய்ந்து இடைமறித்த உக்ரைன் போர் விமானம்: அசத்தல் வீடியோ ஆதாரம்

ரஷ்ய எல்லையில் அமெரிக்கா, ஜப்பான் திடீர் ராணுவ கூட்டு பயிற்சி: எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை | Russia Protests Over Us Japan Military DrillsAP

இந்நிலையில் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் HIMARS ஆயுதம் பயிற்சியின் போது பயன்படுத்தப்படாது என உறுதியளித்துள்ளது.

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யா தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை குவித்து வருவது  குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.