விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ…

விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் சக்கரம் கழன்று விழும் காட்சியைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காட்சியைக் கண்டவர்கள் அந்த விமானத்தின் நிலை குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இத்தாலியிலிருந்து போயிங் விமானம் ஒன்று, புறப்பட்ட நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் சக்கரம் ஒன்று கழன்று விழும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த காட்சியைக் கண்டவர்கள் டிவிட்டரில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ... | The Wheel Fell Off Shortly After Take Off

விமானம் ஓடுபாதையிலிருந்து எழுந்ததும், அதன் சக்கரங்களில் ஒன்று கரும்புகையுடன் கழன்று கீழே விழுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

அந்த விமானத்தின் நிலை என்ன ஆயிற்றோ என ட்விட்டர் பயனர்கள் பலர் அச்சம் தெரிவித்த நிலையில், நேற்றிரவு பிரித்தானிய நேரப்படி 7.00 மணியளவில் அந்த விமானம் வட கரோலினாவில் தரையிறங்கியுள்ளதாக The Sun ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அந்த விமானம் பயணிகள் விமானம் அல்ல, அது ஒரு சரக்கு விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ... | The Wheel Fell Off Shortly After Take Off

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ... | The Wheel Fell Off Shortly After Take Off

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.