வரும் 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 24 விடுமுறை நாட்களில் ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, 24 விடுமுறை நாட்களில் பட்டியல்.
ஜனவரி ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15 தைப்பொங்கல்
ஜனவரி 16 திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 உழவர் திருநாள்
ஜனவரி 26 குடியரசு தினம்
பிப்ரவரி 5 தைப்பூசம்
மார்ச் 22 தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1 ஆண்டு வருட வங்கி கணக்கு முடிவு
ஏப்ரல் 4 மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 7 புனித வெள்ளி
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் 22 ரம்ஜான்
மே 1 மே தினம்
ஜூன் 29 பக்ரீத்
ஜூலை 29 மொகரம் பண்டிகை
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்
செப்டம்பர் 9 கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 17 விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 28 மிலாது நபி
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி
அக்டோபர் 23 ஆயுத பூஜை
அக்டோபர் 24 விஜய தசமி
நவம்பர் 12 தீபாவளி
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்