அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தை குட்டிகளை ,தாய் சிறுத்தையிடம் வனவிலங்கு அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.
ஆண் மற்றும் பெண் என இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் தேயிலை மலையில் இருப்பதை அப்பகுதியில் வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.
இதுதொடர்பாக தொழிலாளர்கள், தோட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தோட்ட அதிகாரி உடனடியாக நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்தையடுத்து .திணைக்கள அதிகாரிகள் சிறுத்தைப்புலி குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.