எலக்ட்ரிக் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த போது பற்றி எரிந்ததால் பரபரப்பு.!

உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை பார்த்து அச்சம் கொள்ளும் மக்கள் இ-ஸ்கூட்டரை நாடுகின்றனர். ஆனால் அடுத்தடுத்து இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து  பற்றி எரியும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம்  எடப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டியை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வகையில் வழக்கம் போல் தனது வீட்டில் சார்ஜ் செய்துவிட்டு பிறகு வேலைக்கு செல்வதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.