ஐரோப்பிய எரிவாயு பிரச்சினையை பயன்படுத்தி தன் திட்டத்தை செயல்படுத்த காய் நகர்த்தும் புடின்: ஜேர்மனியின் பதிலடி…


தன்னிடமுள்ள எரிவாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலம் பில்லியன் கணக்கில் வருவாய் பார்த்துவந்தது ரஷ்யா.

ஆனால், புடினுடைய நாடு பிடிக்கும் ஆசையால் அதற்கு பெரும் அடி விழுந்தது.

எரிவாயு ஏற்றுமதி மூலம் பல பில்லியன் டொலர்கள் வருவாய் பார்த்துவந்தது ரஷ்யா.

குறிப்பாக, ஜேர்மனி முதலான ஐரோப்பிய நாடுகளுக்கு Nord Stream 1 என்னும் திட்டத்தின் மூலம் பிரம்மாண்ட குழாய் வழியாக எரிவாயு அனுப்பி வந்தது ரஷ்யா.

அதுபோக, Nord Stream 2 என்னும் ஒரு திட்டத்தையும் அது துவக்க இருந்தது. அந்த நேரத்தில்தான் நாடு பிடிக்கும் ஆசையால் உக்ரைனை புடின் ஊடுருவ, Nord Stream 2 திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது ஜேர்மனி.

ஐரோப்பிய எரிவாயு பிரச்சினையை பயன்படுத்தி தன் திட்டத்தை செயல்படுத்த காய் நகர்த்தும் புடின்: ஜேர்மனியின் பதிலடி... | Putin Moves The Ball To Implement His Plan

இந்நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளில் நிலவும் எரிவாயு பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் மெதுவாக Nord Stream 2 திட்டத்தை துவக்க காய் நகர்த்துகிறார் புடின்.  

சமீபத்தில் Nord Stream 1 குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. அதில் ஏதோ சதிவேலை இருப்பதாக பல நாடுகள் கருதுகின்றன.

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யாவிடம் எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டன. இந்நிலையில்தான், மெதுவாக மீண்டும் எரிவாயு ஏற்றுமதியைத் துவக்க காய் நகர்த்துகிறார் புடின். அப்படியே கைவிடப்பட்ட Nord Stream 2 திட்டத்தையும் துவக்கலாம் என கனவு காண்கிறார் அவர்.

ஆனால், தங்களிடம் போதுமான எரிவாயு இருப்பதாக கூறியுள்ள ஜேர்மனி, உக்ரைன் பிரச்சினையில் முக்கிய விடயமாக இருக்கும் Nord Stream 2 திட்டம் மூலமாக எரிவாயு பெறுவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.