சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்தியா (20) என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்தியாவை, சதீஷ் ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கிய சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
