குடிநீர் குழாயில் சாராயம்; பீதியில் உறைந்த போலீஸ்!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள குனா மாவட்டம், பான்புரா கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கள்ளச்சாராயம் உற்பத்தி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் எத்தனை முறை சோதனை நடத்தினாலும் மறுநாளே சாராயம் காய்ச்சுவதை வழக்கமாக செய்து வருகின்றனர்.

இது போலீசாருக்கே பெரும் தலைவலியாக கருதப்பட்டு வந்தாலும் உள்ளூர் அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வை இருவர்கள் மீது இருப்பதாலேயே, சாராயம் காய்ச்ச முடிவதாகவும் கூறப்படுகிறது.

மைத்ரேயன் வீசிய குண்டு; எடப்பாடி பழனிச்சாமி பீதி!

அந்தவகையில் சமீபத்தில் இங்கு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு சில வீடுகளில் புதிதாக கை பம்ப்கள் அமைக்கப்பட்டு இருந்தது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது மண்ணை தோண்டி பெரிய கேன்களில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும், தேவைப்படும் பிடித்துக்கொள்ள கை பம்ப் அமைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

சாராயம் கேட்டு வருபவர்களுக்கு கை பம்பை அடித்து தண்ணீர் பிடிப்பதுபோல் சாராயத்தை பிடித்து விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் அதன் மூலம் சாராய பாக்கெட்டுகள் செய்தும் விற்பனை செய்து வந்துள்ளனர்.

எடப்பாடி..ஆதரவாளர்கள் அதிர்ச்சி; மகா ரகசியம் உடைத்த குருமூர்த்தி !

அந்த பகுதி ஒரு குக்கிராமம் என்ற போதிலும் சாராய வியாபாரிகளின் இந்த கண்டுபிடிப்பு மத்தியப் பிரதேசம் போலீசாருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதற்கிணங்க மொத்தம் 1,200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸ் இது தொடர்பாக சிலரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் இந்தளவுக்கு யோசிக்கும் சாராய வியாபாரிகளால் எங்கே நம்முடைய பதவிக்கு சிக்கல் வந்துவிடுமோ? என்று அப்பகுதியில் இருக்கும் காவல நிலைய போலீசார் பீதியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சட்டபேரவை கட்டிடத்தில் பேய்?; 4 ஆண்டில் 6 எம்.எல்.ஏக்கள் சாவு!

இதுகுறித்து சமூகவலைதளவாசிகள் சிலர் கூறுகையில், ‘இந்தியர்களின் கண்டுபிடிப்பு பிரமிக்க வைக்கிறது. இத்தகைய திறமையை சரியான முறையில் இந்தியா உபயோகிக்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.

இன்னும் சிலர், ‘தமிழ்நாட்டில் டாஸ்மாக் கொள்ளையால் ஆந்திராவிலிருந்து சாராயம் வர ஆரம்பித்துவிட்டது. மத்திய பிரதேசம் மக்கள் கோடு போட்டால் ஆந்திரா மக்கள் ரோடு போடுவார்கள். குழாய் மூலம் தமிழ்நாட்டிற்கு கள்ளச்சாராயம் விரைவில் வரும்’ என கிண்டல் அடித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.