கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 24ம் தேதி கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இழுப்பவிளை பகுதியை சேர்ந்த ஸமீல்கான் கைது செய்யப்பட்டார். பெட்ரோல் குண்டு வீசிய ஸமீல்கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.