கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் பிரச்னை… பாட்டியை கொன்ற பேரன்!!

பெங்களூருவை சேர்ந்த சசிலேகா என்பவர் (50), மகன் சஞ்சய் வாசுதேவ் ராவ் (27) மற்றும் தாய் ஷாந்தகுமாரியுடன் வசித்து வந்தார். ஷாந்தகுமாரிசடங்குகள் மீது நம்பிக்கை கொண்டவர். வெளியே சென்றுவந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பேரன் சஞ்சய் வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்துள்ளார். அதற்கு பாட்டி ஷாந்த குமாரி பேரனை திட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த பேரன் பாட்டியை அடித்து கொலை செய்துள்ளார்.

அப்போது அவரது தாய் சசிலேகா, சஞ்சயின் நண்பர் நந்தேஷும் உடன் இருந்தனர். இதனையடுத்து பாட்டியின் உடலை சிமெண்ட் வைத்து மூடி மறைத்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் சசிலேகாவும், மகன் சஞ்சய்யும் வீட்டை காலி செய்துவிட்டனர்.

வீட்டை புனரமைப்பு செய்ய வீட்டின் முதலாளி வேலை செய்த போது அழுகிய நிலையில் பாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் முதலில் சஞ்சய்யின் நண்பர் நந்தேஷ் சிக்கினார். பின்னர் முக்கிய குற்றவாளி சஞ்சய் மற்றும் அவரது தாயாரை போலீஸார் தேடி வந்தனர்.

நீண்ட முயற்சிக்குப் பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூர் பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.கொலை செய்த காலத்தில் சஞ்சய் பொறியியல் படித்து வந்தார். ஆனால் தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு ஹோட்டலில் வெயிட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

தாய் சசிலேகாவும் வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலையை கண்டுபிடித்த பெங்களூரு போலீஸார் கைதான மூவரையும் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.