கிராமிய கலைகள் நிலையத்தினால் சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பிலான ஓர் ஆண்டு இலவச டிப்ளோமா பாட நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் கலாசார உரிமைகளை அழியாது பாதுகாப்பதும், அழிவுக்குள்ளாகிய மற்றும் உள்ளாகி வரும் கலாசார உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றை புனரமைத்தல், படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை உருவாக்குதல், அதன் மூலம் அவர்களுக்கான நிரந்தர மற்றும் சிறப்பான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல் இக்கற்கை நெறியின் இலக்காகும்.
இவ் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் கீழ்வருமாறு,
*விண்ணப்பதாரி 18 தொடக்கம் 45 வயதிற்கு இடைப்பட்டோராக இருத்தல் வேண்டும்
*சாதாரண தரத்தில் சித்திர பாடத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
*நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியில் ஒரு ஆண்டு காலம் பயிற்சி பெறுதல் வேண்டும்.
*கட்டணம் இலவசம்
*அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் நடைமுறை பரீட்சை ஒன்றின் பின் இணைக்கப்படுவதோடு, பரீட்சை குழுவின் முடிவு இறுதி முடிவாகும்.
மேலும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தமது சுய விபரக்கோவை, கல்வித்தகமை மற்றும் சிறப்பு தேர்ச்சிகள் தொடர்பிலான விபரங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் ஒன்றை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பணிப்பாளர் நாயகம், கிராமிய கலைகள் நிலையம்,பெலவத்தை ,பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப முடியும். விண்ணப்பங்கள் இடும் உரையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் கற்கையின் பெயரை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
மேலும் 07534188888 என்ற இக்கத்தின் ஊடக வாட்ஸப் மூலம் தொடர்புகொண்டு கூகுள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள முடிவதுடன், விண்ணப்ப திகதிக்கான இறுதி திகதி 2022.10.25 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2022.11.15 அன்று குறித்த கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் தேவைப்படின் 011 2786716 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளவும்.