சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்னால் ஒருவர் கீழே தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய சுவாதி – ராம்குமார் கொலை வழக்கு பாணியில் இந்த சம்பவம் நடந்ததா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்தியா (20) என்ற மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்தியாவை, சதீஷ் ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார்.

ரயிலில் சிக்கிய சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொலையாளி சதீஷை பொலிசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2016ல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் சுவாதி என்ற பெண் வெட்டி கொல்லப்பட்டார்.
ஒருதலை காதல் விவகாரத்தில் ராம்குமார் என்பவர் அவரை கொலை செய்தார் என பொலிசார் அப்போது தெரிவித்தனர்.
தற்போது அதே பாணியில் கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை
காதல் சண்டையில் காதலியை தள்ளிவிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்@GMSRailway @rpfsrmas pic.twitter.com/xgIYtmSP9Q
— Krishna (@krishna_journa) October 13, 2022