ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல் நடத்திய வட கொரியா: அணு ஆயுத பயிற்சிகளையும் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு


வட கொரியா-வால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பான் கிழக்கு கடலில் விழுந்தது.


பல ஏவுகணைகளை ஏவி இருக்கலாம் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கருத்து.

வட கொரியா வியாழக்கிழமையான இன்று அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கிழக்கு கடலில் ஏவியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியா-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நாளுக்கு முன்னதாக, வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் அடையாளம் அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தினர். 

இதனை தொடர்ந்து கிழக்கு கடல் பிராந்தியத்தில் வட கொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பயிற்சி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல் நடத்திய வட கொரியா: அணு ஆயுத பயிற்சிகளையும் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு | North Korea Fires Missile Into Sea Of Japan SeoulEPA

இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று பத்து வட கொரிய ராணுவ விமானங்கள் தென் கொரிய நாட்டின் வான் எல்லைக்கு அருகில் அடையாளம் காணப்பட்டது என தென் கொரியா தெரிவித்ததை தொடர்ந்து, கிழக்கு கடல் பகுதியில் அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா ஏவி இருப்பதாக தென் கொரியாவின் கூட்டுப் படை தலைவர்கள்  தெரிவித்துள்ளார்.

வட கொரியாவால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் EEZ (பிரத்தியேக பொருளாதார மண்டலம்)க்கு வெளியே விழுந்ததாக நம்பப்படுகிறது என செய்தி ஊடகமான NHK தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல் நடத்திய வட கொரியா: அணு ஆயுத பயிற்சிகளையும் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு | North Korea Fires Missile Into Sea Of Japan Seoul

 மேலும், இன்றைய ஏவுகணை தாக்குதலின் போது பல ஏவுகணைகளை ஏவி இருக்கலாம்  என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: சண்டைக்கு தயாரான வேல்ஸ் இளவரசர் வில்லியம்: மகிழ்ச்சியில் புன்னகைத்த இளவரசி கேட்

அத்துடன் இந்த வார தொடக்கத்தில் வட கொரியா தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், தந்திரோபாய அணு ஆயுதப் பயிற்சிகளை நடத்தியது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.