இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இடைப்பட்ட கடவூரில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்கும் நோக்கில், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள, 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படவுள்ளது.