தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை
சென்னை ஆவடி பகுதிகளான சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரபாளையம், பெரியார் தெரு புழல் கதிர்வேடு முழுவதும், சீனிவாசா நகர், ஜே.பி.நகர், புத்தகரம், சூரபேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருவேற்காடு பகுதிகளில் ஐஸ்வர்யா கார்டன், ராயல் கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி, கோ ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பாலை துணைமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்
தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
நாகர்கோவில்
நாகர்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் உப மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.