புதுச்சேரி : புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் உள்ள மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு, நெய்வேலி என்.எல்.சி., உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் சிறப்பு செயலர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலாளர் செல்வமணி, பொருளாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம் செய்யும் வரை, அனைத்து சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 50,000 வழங்க வேண்டும்.
வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலர் சேகர் கூறுகையில், ‘என்.எல்.சி.,யில் எங்களுக்கான கோரிக்கைகள் தொடர்பாக சொல்ல வந்தால் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு தமிழ் தெரியவில்லை. எங்களுக்கு இந்தி தெரியவில்லை.
தொழிலாளர்கள் கூறும் கோரிக்கைகளை கேட்டு புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். பணி நிரந்தரம், மாத ஊதியம் ரூ. 50 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கா விட்டால் மாநில அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement