வழக்கு எண் ஆனபின் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு!
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சமூக வலைதளங்களில் நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில், நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக கருத்தை பதிவேற்றம் செய்திருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது.
சவுக்கு சங்கர் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக தெரிவித்தது உண்மையா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சவுக்கு சங்கரின் பதில் மனுவை ஏற்றுக் கொள்ளாத மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக காரணங்கள் மற்றும் சவுக்கு சங்கர் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சவுக்கு சங்கர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் என்னிடம் படாத இந்த வழக்கு விரைவில் என்னிடப்பட்டு விசாரணைக்கு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பாக ஜக்ராடி சிங் என்ற வழக்கறிஞர் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.