
பிரான்ஸ் நாட்டுக்கு ரொமான்றிக் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளது உக்ரைன்.
ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது ரொமான்றிக் விடயம் அல்ல.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் பிரான்சுக்காக ரொமான்றிக் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது.
சிவப்பு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் என துவங்கும் அந்த வீடியோ, உண்மையில், பிரான்சிடம் ஆயுதங்களை கோருவதற்காக, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ஆகும்.
தங்களுக்கு மேலும் ஆயுதங்கள் வேண்டும் என்று குறிப்பிடுவதற்காகத்தான் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
Sophie Marceau… Isabelle Adjani… Brigitte Bardot…
Emmanuel Macron! … and CAESARs!
🇺🇦❤️🇫🇷 pic.twitter.com/JQDmAO6cjH— Defense of Ukraine (@DefenceU) October 12, 2022
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஏற்கனவே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் வழங்க இருப்பதாக சென்ற வாரம் அறிவித்திருந்தார்.
ஜூன் மாதத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்குச் சென்றிருந்தபோது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அளவளாவியதைக் காட்டும் அந்த வீடியோ, தயவு செய்து மேலும் ஆயுதங்கள் அனுப்புங்கள் என்ற கோரிக்கையுடன் முடிவடைகிறது.